Pages

Monday, April 14, 2014

Our Garden எங்கள் வீட்டுத் தோட்டம்.

 Oxalic triangularis - Purple Shamrock
இத்தாவரத்தின் இலைகள் முக்கோண (Triangular shape) வடிவமைப்புடையவை. பகல் நேரங்களில்  அல்லது சூரிய வெளிச்சம் நன்றாக உள்ளபோது இவற்றின் இலைகள் விரிந்தும், இரவு நேரங்களில் அல்லது வெளிச்சம் குறைவான நேரங்களில் இலைகள் நன்றாகக் குவிந்தும் காணப்படும். இம்மாற்றம் நடைபெறுவது இவ்விலையின் அடிப்பகுதியிலுள்ள கலங்களின் விறைப்பு அல்லது அழுத்த மாற்றத்தினாலேயே நடைபெறுகின்றது.
      இவை கூடுதலாக வீட்டினுள் வளர்க்கப்படும் தாவரம். இத்தாவரம்  15 டிகிரி செல்சியஸ் ( 60 டிகிரி பாரனைற்)உட்புற  வெப்பநிலையிலும் வாழும். இதற்கு  பிரகாசமான அல்லது நேரடி சூரிய ஒளி தேவைப்படுகிறது. இத்தாவரத்திற்கு  வெப்பநிலை27 டிகிரி செல்சியஸ் (80 டிகிரி)பாரனைற்  மேலே சென்றால் ஒரு "சோர்வான " தோற்றத்தை கொடுக்கும்.  சாதாரண பூச்சாடிகளுக்குப் பயன்படுத்தும் மண் போதுமானது.
     இதாவரம் கிழங்குகள் ( bulbs) மூலம் உருவாக்கப்படும். இவை கோடை கால முடிவில் உறங்கு நிலைக்குச் சென்று திரும்பவும் கோடை காலம் ஆரம்பிக்கும்போது  உருவாக்கும். இத்தாவரத்தின் முதிர் தாவரங்கள் 3-5 வருடத்திற்கொரு முறையும், இளநிலைத் தாவரங்கள் வருடத்திற்கொரு முறையும் வளரும்.




Oxalis triangular - Purple Shamrock





Hydrangea

Four O`Clock Flower or Marvel of Peru


  • Four O`Clock flowers are very beautifully and contrasting colors.
  • Family:  Imaginative
  • Genus:  Mirabilis
  • Species: M. Jalapa
  • Biominal Name: Mirabilis Jalapa
இந்தப் பூவினை நாம் நான்கு  மணிப்பூ என்று அழைப்போம்.

இதில் உள்ள முக்கிய அம்சம் இரண்டு நிறங்கள் ஒரே பூவில் காணப்படும்.   இந்த நான்கு மணி பூக்கள் பல நிறங்களில் பல வண்ணங்களில் காணப்படும். ஒரு மரத்திலேயே பல்வேறு நிறப்பூக்கள் மலர்ந்திருக்கும். இந்நிறங்கள் பொட்டுக்களாகவும், அள்ளித்தெளித்த கோலம் போலவும், சில கோடுகளாகவும் காணப்படும். இதில் இருக்கும் இன்னுமொரு சுவாரசியம் என்னவென்றால், ஒரு பூ   இதில் இருக்கும் இன்னுமொரு சுவாரசியம் என்னவென்றால் ஒரு பூ நிறம் மாறும் தன்மையுடையது.  இவை மஞ்சள், மெல்லிய சிவப்பு, அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும்.  உதாரணமாக மஞ்சள் ஒரு இருண்ட சிவப்பு நிறத்திலும், வெள்ளைப் பூக்கள் மெல்லிய ஊதா நிறத்திலும் மாற்றமடையும். இவை பிற்பகலிலேயே பூக்கும், காலையில் பூக்கள் குவிந்து வாடிவிடும். மறுநாள் திரும்பவும் மாலையில் பூக்கள் மலரும். இவற்றின் இதழ்கள்(அல்லிகள்) நிறத்தைக் கொடுத்து பூவாவதில்லை. இவற்றின் புல்லிகளே பூக்களாகின்றன.
இவற்றை அந்துப்பூச்சிகள் (Sphincter) (நீண்ட ஊசிபோன்ற உறிஞ்கி மூலம்) வாசனை மூலம் முகர்ந்து மகரந்தச்சேர்க்கை அடைகின்றன. 
இந்த நான்கு மணிக்கன்றுகள் தென் அமெரிக்காவில் முதலில் தென்  மெரிக்காவில் தோன்றியதெனலாம். இவை வெப்பமான பகுதிகளிலும், சில குளிரான பகுதிகளிலும் காணப்படும். குளிரான இடங்களில் உள்ளவை கிழங்குகள் (முகிளுருவான வேர்கள்) நிலத்திலேயே உறங்கு நிலையிலிருந்து வசந்த காலத்தில் மீண்டும் முளைக்கும்.  இவற்றிற்கு நல்ல போதுமான சூரிய ஒளி தேவைப்படும். இவை 0.9 மீ உயரம் வரை வளரும். இவற்றின் விதை முதலில் மஞ்சள் நிறமாயும், முதிர்ச்சியடைந்ததும் கோள வடிவான கறுப்பு  நிறமாகவும் இருக்கும்.


Header 1 Header 2














































   








 

No comments:

Post a Comment