Pages

Wednesday, August 12, 2015

மனிதர்களின் பல வித குணங்கள்

மனிதர்களின் பல வித குணங்கள்

மனிதர்களில் மறைந்துள்ள பலவகையான குணங்களை பாரதியார் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
  1. மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன்  - பாம்பு 
  2. பிறருக்கு பிரியமாக நடந்துகொண்டு அவர்கள் கொடுப்பதை வாங்கி விற்பவன் - நாய் 
  3. அறிவுத்துணிவால் பெரும் பொருளைத் தேர்ந்தெடுக்காமல் முன்பு கூறியதைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பவன் - கீரிப்பிள்ளை 
  4. வஞ்சகம், சூத்திரம் என்பவற்றால் கபடங்கள் செய்துகொண்டிருப்பவன் - நரி
  5.  விண்மீனுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுபவன் - வான்கோழி 
  6. தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரிப்பவன - கழுகு 
  7. ஊக்கமில்லாமல் சோர்வுடன் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருப்பவன் - தேவாங்கு 
  8. ஒரு புது உண்மை வரும்போது அதை அன்போடு வரவேற்காமல் வெறுப்படைகிறவன்  - ஆந்தை 
  9. தர்மம், புகழ் எதிலும் விருப்பமின்றி அற்ப சுகத்தில் மூழ்கிக் கிடப்பவன் - பன்றி 
  10. பிறர் தன்னை எவ்வளவு தூரம் அவமதித்த போதும் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் - கழுதை 

No comments:

Post a Comment