Showing posts with label படித்ததில் பிடித்தவை.. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தவை.. Show all posts

Wednesday, August 12, 2015

மனிதர்களின் பல வித குணங்கள்

மனிதர்களின் பல வித குணங்கள்

மனிதர்களில் மறைந்துள்ள பலவகையான குணங்களை பாரதியார் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
  1. மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன்  - பாம்பு 
  2. பிறருக்கு பிரியமாக நடந்துகொண்டு அவர்கள் கொடுப்பதை வாங்கி விற்பவன் - நாய் 
  3. அறிவுத்துணிவால் பெரும் பொருளைத் தேர்ந்தெடுக்காமல் முன்பு கூறியதைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பவன் - கீரிப்பிள்ளை 
  4. வஞ்சகம், சூத்திரம் என்பவற்றால் கபடங்கள் செய்துகொண்டிருப்பவன் - நரி
  5.  விண்மீனுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுபவன் - வான்கோழி 
  6. தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரிப்பவன - கழுகு 
  7. ஊக்கமில்லாமல் சோர்வுடன் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருப்பவன் - தேவாங்கு 
  8. ஒரு புது உண்மை வரும்போது அதை அன்போடு வரவேற்காமல் வெறுப்படைகிறவன்  - ஆந்தை 
  9. தர்மம், புகழ் எதிலும் விருப்பமின்றி அற்ப சுகத்தில் மூழ்கிக் கிடப்பவன் - பன்றி 
  10. பிறர் தன்னை எவ்வளவு தூரம் அவமதித்த போதும் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் - கழுதை 

Tuesday, May 27, 2014

படித்ததில் பிடித்தவை.

படித்ததில் பிடித்தவை. 

இது சொல் அலங்காரம் 

இரண்டு வினாக்களுக்கு ஒரு பதில்

1. குடிக்கத் தேன் கிடைப்பது எதனால்?
   கூந்தல் மணப்பது எதனால்?
   பூவினால்
2. வந்தும் கெடுப்பது எது?
   வராமலும் கெடுப்பது எது?
   மழை
3. இலங்கை அழிந்ததேன்?
   இரும்பு உருகுவதேன்?
     நெருப்பால்.
4. ஆவணி பிறப்பது எதனால்?
    நாடகம் முடிவது எதனால்?
    ஆடி முடிவாதனால்.
5. வினா வெளிவருவதேன்?
   வைக்கோல் போர் போடுவதேன்?
   விடைக்காக. 
6.  குவளைத் தண்ணீர் குறைவதேன்?
    குப்புசாமி உளறியது எதனால்?

    குடித்ததனால்
7. 
அவரைக்காய் காய்த்ததேன்?
    
அடுத்த்தவர் பின் சுற்றுவதேன்?
     பிடுங்கித்‌தின்ன
8.  கடிகாரம் ஓடுவது எதனால்?
     கனத்த பூட்டு கைப்பட்டு திறப்பத
னால்?
     சாவி கொடுப்பதனால்
9.  அண்ணன் கல்வியில் வாங்காதது என்ன?
     தம்பி கடையில் வாங்கியது என்ன?
     பட்டம்
10. தேடாமல் கிடைப்பது எது?
     தேடும் செல்வத்தை குறைப்பது எது?
     சோம்பல்
நன்றி: பஞ்சவர்ணக் கதம்பம்


Related Posts Plugin for WordPress, Blogger...