மனிதர்களின் பல வித குணங்கள்
மனிதர்களில் மறைந்துள்ள பலவகையான குணங்களை பாரதியார் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
- மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் - பாம்பு
- பிறருக்கு பிரியமாக நடந்துகொண்டு அவர்கள் கொடுப்பதை வாங்கி விற்பவன் - நாய்
- அறிவுத்துணிவால் பெரும் பொருளைத் தேர்ந்தெடுக்காமல் முன்பு கூறியதைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பவன் - கீரிப்பிள்ளை
- வஞ்சகம், சூத்திரம் என்பவற்றால் கபடங்கள் செய்துகொண்டிருப்பவன் - நரி
- விண்மீனுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுபவன் - வான்கோழி
- தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரிப்பவன - கழுகு
- ஊக்கமில்லாமல் சோர்வுடன் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருப்பவன் - தேவாங்கு
- ஒரு புது உண்மை வரும்போது அதை அன்போடு வரவேற்காமல் வெறுப்படைகிறவன் - ஆந்தை
- தர்மம், புகழ் எதிலும் விருப்பமின்றி அற்ப சுகத்தில் மூழ்கிக் கிடப்பவன் - பன்றி
- பிறர் தன்னை எவ்வளவு தூரம் அவமதித்த போதும் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் - கழுதை
No comments:
Post a Comment