கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி
(Coleus aromaticus)
மருத்துவ குணம் கொண்ட இச்செடி தடித்த இலை, தண்டு என்பவற்றையும், இதன் இலை மென்மையாகவும் காணப்படும். இத்தாவரத்தின் பக்கங்களான பிள்ளையும், தண்டும் முக்கியமாக குழந்தைகளுக்கு சளியைப் போக்கும் அருமருந்தாகும்.
கசப்பும், காரமும் கொண்ட கற்பூரவல்லி இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களைக் குணப்படுத்தும்.
கற்பூரவல்லி இல்லை மற்றும் தண்டை நீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆரிய பின் குடிநீராக குடிக்க இருமல், சளி என்பன குணமடையும்.
சிறுகுழந்தைகளுக்கு இவ்விலையை நன்கு கழுவி, அரைத்து சாறு பிழிந்து, தேனுடன் கலந்து கொடுத்தல் நெஞ்சு சளி குறையும்.
No comments:
Post a Comment