எங்கள் வீட்டுத் தோட்டம்.(Our Garden)Thursday, August 11, 2011


Our Garden

Flowers and veggies are in our backyard, it can be a big joy.  Also, I have some indoor plants in our home. Keep them for more than six years.
Oxalis triangularis - Purple Shamrock
hydrangea

Four O`Clock Flower or Marvel of Peru
  • Four O`Clock flowers are very beautifully and contrasting colours.
  • Family:  Nyctaginaceae
  • Genus:  Mirabilis
  • Species: M. Jalapa
  • Biominal Name: Mirabilis Jalapa
இந்தப் பூவினை நாம் நான்கு  மணிப்பூ என்று அழைப்போம்.  இதில் உள்ள முக்கிய அம்சம் இரண்டு நிறங்கள் ஒரே பூவில் காணப்படும்.   இந்த நான்கு மணி பூக்கள் பல நிறங்களில் பல வண்ணங்களில் காணப்படும்.ஒரு மரத்திலேயே பல்வேறு நிறப்பூக்கள் மலர்ந்திருக்கும். இந்நிறங்கள் பொட்டுக்களாகவும், அள்ளித்தெளித்த கோலம் போலவும், சில கோடுகள் போன்றும் காணப்படும்.  இதில் இருக்கும் இன்னுமொரு சுவாரசியம் என்னவென்றால் ஒரு பூ ஒரு நிறம் மாறும் தன்மையுடையது. இவை மஞ்சள், மெல்லிய சிவப்பு, அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும்.  உதாரணமாக மஞ்சள் ஒரு இருண்ட சிவப்பு நிறத்திலும், வெள்ளைப் பூக்கள் மெல்லிய ஊதா நிறத்திலும் மாற்றமடையும். இவை பிற்பகலிலேயே பூக்கும், காலையில் பூக்கள் குவிந்து வாடிவிடும். மறுநாள் திரும்பவும் மாலையில் பூக்கள் மலரும். இவற்றின் இதழ்கள்(அல்லிகள்) நிறத்தைக் கொடுத்து பூவாவதில்லை. இவற்றின் புல்லிகளே பூக்களாகின்றன.
இவற்றை அந்துப்பூச்சிகள் (Sphinidae) (நீண்ட ஊசிபோன்ற உறிஞ்கி மூலம்) வாசனை மூலம் முகர்ந்து மகரந்தச்சேர்க்கை அடைகின்றன. 
இந்த நான்கு மணிக்கன்றுகள் தென் அமெரிக்காவில் முதலில் தென்  மெரிக்காவில் தோன்றியதெனலாம். இவை வெப்பமான பகுதிகளிலும், சில குளிரான பகுதிகளிலும் காணப்படும். குளிரான இடங்களில் உள்ளவை கிழங்குகள் (முகிளுருவான வேர்கள்) நிலத்திலேயே உறங்கு நிலையிலிருந்து வசந்த காலத்தில் மீண்டும் முளைக்கும்.  இவற்றிற்கு நல்ல போதுமான சூரிய ஒளி தேவைப்படும். இவை 0.9 மீ உயரம் வரை வளரும். இவற்றின் விதை முதலில் மஞ்சள் நிறமாயும், முதிர்ச்சியடைந்ததும் கோள வடிவான கறுப்பு நிறமாகவும் இருக்கும். 

Tulips இந்த முறை வசந்த காலத்தை வரவேற்கும் பூ இந்த டியூலிப் பூ தான். இவற்றின் குமிழ்களை இலையுதிர் காலம் ஆரம்பிக்கும்போது புரட்டாதி மாதத்திலே நட்டு வைத்தோம்.  
இந்த டியூலிப் வகைத் தாவரமானது குமிழ் மூலம் உருவாகும் தாவரமாகும். 
கூர்மையான பல்பின் பாகம் மேலிருக்கத்தக்கவாறு பல்பின் மூன்று மடங்கு ஆழத்தில் ஊன்ற வேண்டும். இவற்றிற்கு நல்ல வடிகால்அல்லது நீர் வடிந்தோட்டக் கூடிய மண் நல்லது. இவற்றிக்கு முதல் ஆண்டு எந் உரமும் தேவைப்படாது. அடுத்தடுத்த ஆண்டுகளில், இவற்றிற்கு நன்கு அழுகிய மாட்டு எரு அல்லது நல்ல பசளை மண் போட வேண்டும்.


 http://ajanthacake-ensuganthaillam.blogspot.ca/2014/04/our-garden.html

We planted one pear tree in our backyard five years ago. I am so excited ever year that pear tree is blooming. Very first year it flowered and got some good pears. Another year the tree diseased as a leafs and pears on black spots. Pear tree started to bloom, very nicely and beautiful.  The pear has white five petals and stamens are in the center of the flower.

Carrot

Two years ago, I harvested these carrots in our garden.
Carrots

Deptford pink flower

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...